Sunday, September 20, 2009

இது ஒரு பிரம்பின் கனவு



மாணவதோழனே!
நீ நினைத்தால்எட்டு
திக்கும்தொட்டு விடும் தூரம்தான்!
கருத்தோடு நீ படிக்க

காமராஜர் தந்தகல்வி இது.
பருவத்தே பயிர் செய்து
பகலவனாய் எழுந்து வா!

கவனமாய் நீபடித்தால்................
கரும்பலகையும்
உன்கைஎழுத்து படக்காத்திருக்கும்!

சிப்பிக்குள் சிறைப்படும்
மழைத்துளி மணி முத்தாவது
சிப்பியின் சிரமத்தால்தான்.


நீ...........நல முத்தாவதும்
கல் உப்பாவதும்
உன் கையில்தான்!

தீபமும் தீபந்தமும் எழுவது
தீக்குச்சியின் உரசலில் தான்.
நீ....தீபமாய் ஒளிரவே
நாங்கள் தீக்குச்சிகளாகின்றோம்!


பாதத்தை கீறும்
பரல்களுக்கு பயந்து
பயணங்கள் நிற்பதில்லை.


தோல்விகளால்
துவண்ட சோதனைகள்
சாதனைகளாவதில்லை!


நீ சாதிக்கு பயந்தவனாக அல்ல.
சாதிக்க பிறந்தவனாயிறு!


இளைப்பாராத எரும்பாயிறு.
இமயமும்எட்டடிதான்!

உன் கைஎழுத்தை கண்டித்த
எங்கள் கூட்டத்தை
உன் ஒரு கைஎழுத்திர்க்காக
காத்திருக்க வையடா.


கண்ணநீர் மல்க கூறுகின்றோம்.
காத்திருக்கும் காலமும்
கனப்போழுதாகுமடா
கற்றுக்கொடுத்த கைகளுக்கு!

2 comments:

  1. வலியின் ஓசை ....தாளமிட்டும் சத்தமில்லாமல்

    ReplyDelete
  2. // தீபமும் தீபந்தமும் எழுவது
    தீக்குச்சியின் உரசலில் தான்.
    நீ....தீபமாய் ஒளிரவே
    நாங்கள் தீக்குச்சிகளாகின்றோம்!

    உன் கைஎழுத்தை கண்டித்த
    எங்கள் கூட்டத்தை
    உன் ஒரு கைஎழுத்திர்க்காக
    காத்திருக்க வையடா. //

    very nice....

    ஒரு பிரம்பின் கனவை உங்கள் கவிதையின் மூலம் ஜெயிக்க வைத்துவிட்டீர்கள்..நன்றி..

    ReplyDelete