
இலங்கையில்
தனி தமிழ் ஈழத்திற்காய்
கொலை வாளினை
எடுத்தவனுக்கு யாரடா
கோடித்துணி போர்த்துவது?
இரும்புகள் அழிக்கப்படலாம்.
இமாலயங்கள் அழிவத்தில்லை!
கடலின் மடி சாய்ந்த
சூரியனை கண்டு
மரித்து விட்டான் என்று ஆர்பரிக்காதே!
சூரியன் மரிப்பதுமில்லை!
தன் கதிர்களால்
பூமிக்கு ஒளியூட்ட மறப்பதுமில்லை!
இலங்கையனே!
இரக்கமற்ற அரக்கனே!
உன்னை போல்
கூலிக்கு வேலை செய்யும்
கூட்டம் அல்ல!
இறப்பு ஏற்படினும்
இலக்கு நோக்கும்
பீனிக்ஸ் பறவைகள் நாங்கள்!
நெருப்பிற்கு யாரடா
எரிக்க கற்று கொடுப்பது?
எங்கள் தலைவன்
எழுந்து வருவது உறுதி!
எண்ணிக்கொண்டிறு உன்
வாழ்நாளை!
எழுதிகொடுக்க ஆயத்தமாயிரு
எங்களுக்கான தனி ஈழத்தை!
No comments:
Post a Comment