
என் மூதாதையருக்கு
வட்டமாய்,
கலீலியோவின் கண்டுபிடிப்பில்
தட்டையாய்,
பேருந்து ஜன்னல்களில்
சதுரமாய்,
தங்கையின்
ஜாமேன்றி பெட்டி மூலைவிட்டத்தில்
முக்கோணமாய்.....
உழுதுழைக்கும் உழவனுக்கு
பச்சையாய்,
கவிஞனுக்கு
உவமை பொருளாய்,
குயவனுக்கு
சுட்ட மண்ணாய்,
வெற்று கண்களுக்கு
வெட்ட வெளியாய்,
தீவிரவாதிகளுக்கு
சிவப்பு ரத்தமாய்.....
எது
என் பூமி?
இது
பார்வையின் பரிகாசமா?
பார்பவரின் மதி விலாசமா?
புதிர்களுக்குள் என்னை
பயணிக்க செய்து விட்டு
தானும்
சுற்றி கொண்டிருக்கிறது
குழப்பத்தில்
தலை நிறுத்தாமல்!
வட்டமாய்,
கலீலியோவின் கண்டுபிடிப்பில்
தட்டையாய்,
பேருந்து ஜன்னல்களில்
சதுரமாய்,
தங்கையின்
ஜாமேன்றி பெட்டி மூலைவிட்டத்தில்
முக்கோணமாய்.....
உழுதுழைக்கும் உழவனுக்கு
பச்சையாய்,
கவிஞனுக்கு
உவமை பொருளாய்,
குயவனுக்கு
சுட்ட மண்ணாய்,
வெற்று கண்களுக்கு
வெட்ட வெளியாய்,
தீவிரவாதிகளுக்கு
சிவப்பு ரத்தமாய்.....
எது
என் பூமி?
இது
பார்வையின் பரிகாசமா?
பார்பவரின் மதி விலாசமா?
புதிர்களுக்குள் என்னை
பயணிக்க செய்து விட்டு
தானும்
சுற்றி கொண்டிருக்கிறது
குழப்பத்தில்
தலை நிறுத்தாமல்!
No comments:
Post a Comment