
என் கவிகூடினை உடைத்தது யார்?
தேடல் வேட்டை தொடங்கியது.
காற்றை போல ஏனோஉடைத்தவன் சுவடு கூட தெரியவில்லை.
போகட்டும்.
கூட்டிலிருந்து அழகு தரும்பட்டு புழுக்கள் வெளிப்படலாம்.
ஆனந்தம் தரும் வண்ணத்து பூச்சிகளும் வெளிப்படலாம்.
ஒருவேளை,
உங்களை முகம் சுளிக்க வைக்கும் மண்புழுக்களும் வெளிப்படலாம்.
ஆனால்.........இவை யாவும் உன்னுள் என்னுள் ஊர்ந்து கிடக்கும்
உயிர் கொண்ட ஜீவன்களே!
No comments:
Post a Comment