Sunday, September 20, 2009

ஓசை இல்லாத ஓலங்கள்


கூடு கட்ட மைனாக்கள் இல்லை,
பிஞ்சு குரலில் கொஞ்சி பேசும் கிளிக்கூட்டம் இங்கில்லை,
சின்னப்பழம் கொறிக்கும் சிட்டுக்குருவிகளும் இல்லை,
மழையில் மகிழ்ந்ததுமில்லை,வெயிலில் காய்ந்ததுமில்லை,
இளைப்பாற இங்கே எவருமில்லை,
கருப்பையில் கனிகளை சுமந்ததுமில்லை,
காற்றை எப்போதும் பிரசவித்ததுமில்லை,
இருந்தும்,எங்கள் விழி ஓரங்களில் ஈரமில்லை.
உங்கள் கலைக்காய், எங்கள் காலம் கழிந்து கொண்டிருக்கிறது.
"போன்சாய்" என்னும் பெயரோடு!

1 comment:

  1. கற்பனையின் மிச்சம்... போன்சாய் எனும் கலையைபோல ஓசை இல்லாத ஓலங்களும் நிலைத்து நிற்கும்..

    ReplyDelete