Thursday, September 17, 2009

நாய் விற்ற காசு குறைக்கும்!


அடித்து (காக்காய்) பிடித்து
ஓர் அரசாங்க வேலை
கிடைத்தது.

முதல் முதலாய் வாங்கிய
கிம்பளம்
ரூபாய் ஐந்தாயிரம்!

கடவுளிடம் ஓர்
கணக்கு துவங்கினேன்.
வாங்கும் கிம்பளத்தில்
அவருக்கும் ஒரு
கிம்பளம் தருவதாக!

கார், பங்களா,
தங்கம், வைரம்,
பையனுக்கு டாக்டர் படிப்பு,
என் மூளை வளரும்
கிம்பளங்களை எண்ணிக்கொண்டிருந்தது.

கனவுகளை கலைத்த
தொலைபேசி அலறல்.
வேண்டா வெறுப்புடன்
ஓலி வாங்கியை கைவாங்கினேன்.

என் மகன்தான் பேசினான்.
அப்பா,
அம்மா மாடிப்படி தவறி
விழுந்து விட்டாள்!
சர்ஜரி செய்ய வேண்டுமாம்.
5000 ரூபாய் வேண்டுமாம்!

No comments:

Post a Comment