Thursday, September 17, 2009

சூரியன்!



தூங்கி எழுந்து,
கொஞ்சமாய்
சோம்பல் முறித்து,
கதிர்கலெனும் ஆடை உடுத்தி,
கடல் கண்ணாடியில்,
முகம் பார்த்து,
திருப்தி அடைந்து,
பின்னே
மெல்ல புறப்பட்டு,
தன் சுட்டெரிக்கும்
நெருப்பால்,
பூமிக்கு சுடர்விளக்காகி,
மயங்கும் மாலையில்,
கடலின் மடி சாய்ந்து,
கன்னம் சிவக்கையில்,
ஆண்களுக்கும்,
வெட்கம் வருமென்பதை
அவனிடமே கண்டேன்!

No comments:

Post a Comment