எங்கேயாவது சில தருணங்களில்தவறுதலாய்
எனைக்கண்டால்கூட
கோபக்கனல் ஒன்று மூட்டி,
தன் நடையின்
வேகத்தைக்கூட்டி,
கண் முன்னே
காணாமல் போகும் அப்பா!
அவர் சொன்ன
ஜாதிக்கு மாலையிட மறுத்து
ஓர் மனிதனை
மணந்ததன் விளைவு,
மேற்சொன்ன நிகழ்வு!
ஆனால்..............
அவர் இன்னும்
உரத்த குரலில்
இசையோடு இனிமையாய்,
பள்ளிகளில்
பாரதி படத்தின் கீழே
பாடி கற்றுக்கொடுக்கிறார்,
"ஜாதிகள் இல்லையடி பாப்பாவென்று"!

No comments:
Post a Comment