
மணமாகி
மறு வீடு போன
எம்மவளே!
உன்னை
பொணமா பாக்கத்தானா
பொண்ணப் பெத்தெடுத்தேன்!
கல்யாணத்துக்கு
கட்டி வச்ச
வாழ மட்ட காயலியே!
புதுசா பூத்த
என் பூங்கொத்து
கருகிடுச்சே!
வயித்துக்கு சோறு
போட்ட கால் காணி
பூமி கூட
உன் கல்யாண
செலவாத்தான் கரைஞ்சிடிச்சி!
ஏழெட்டு பவுனுக்கே
என் காசு இரையாச்சு!
பாக்கி பவுனுக்கும்
பசுமாட்டை எழுதிவேச்சேன்!
கல்யாணம் முடிஞ்சு
கற்பகமா வருவேன்னு
காத்திருந்தேன்!
இப்படி கரிக்கட்டையா
வருவேன்னு
கனவுயிலும் நினைக்கலடி!
சவரன் போதலைன்னு
சத்தமில்லாம கொன்னுபுட்டான்!
போலீசு கூட
அவன் காசுக்குத்தான்
நாயாச்சு!
பெத்த வயிறு
நெருப்பில்லாம எரியுதடி!
நாலு பல போயி
மாசம் ரெண்டாச்சு!
மெதுவாத்தான்
எட்டுச்சி எங்காத்துக்கு
அந்த சேதி!
வாழைத்தோட்டம் வந்தவன்
கருநாகம் தீண்டி
கண்ணா மூடிட்டானாம்!
ஓடோடி வந்தேண்டி
எம் பொண்ணே
உன்னை பாக்க!
கண்ணார
என்னை பாத்து
சிரிச்சபோது
என் மாவளாயில்லை.
கருமாரியாத்தான்
நீ தெரிஞ்ச!
மறு வீடு போன
எம்மவளே!
உன்னை
பொணமா பாக்கத்தானா
பொண்ணப் பெத்தெடுத்தேன்!
கல்யாணத்துக்கு
கட்டி வச்ச
வாழ மட்ட காயலியே!
புதுசா பூத்த
என் பூங்கொத்து
கருகிடுச்சே!
வயித்துக்கு சோறு
போட்ட கால் காணி
பூமி கூட
உன் கல்யாண
செலவாத்தான் கரைஞ்சிடிச்சி!
ஏழெட்டு பவுனுக்கே
என் காசு இரையாச்சு!
பாக்கி பவுனுக்கும்
பசுமாட்டை எழுதிவேச்சேன்!
கல்யாணம் முடிஞ்சு
கற்பகமா வருவேன்னு
காத்திருந்தேன்!
இப்படி கரிக்கட்டையா
வருவேன்னு
கனவுயிலும் நினைக்கலடி!
சவரன் போதலைன்னு
சத்தமில்லாம கொன்னுபுட்டான்!
போலீசு கூட
அவன் காசுக்குத்தான்
நாயாச்சு!
பெத்த வயிறு
நெருப்பில்லாம எரியுதடி!
நாலு பல போயி
மாசம் ரெண்டாச்சு!
மெதுவாத்தான்
எட்டுச்சி எங்காத்துக்கு
அந்த சேதி!
வாழைத்தோட்டம் வந்தவன்
கருநாகம் தீண்டி
கண்ணா மூடிட்டானாம்!
ஓடோடி வந்தேண்டி
எம் பொண்ணே
உன்னை பாக்க!
கண்ணார
என்னை பாத்து
சிரிச்சபோது
என் மாவளாயில்லை.
கருமாரியாத்தான்
நீ தெரிஞ்ச!

No comments:
Post a Comment