Thursday, October 29, 2009

காதல்


உனக்கு பிடித்ததாய்,
நீ உரைத்த உணவை
புத்தகத்தின் துணை கொண்டு,
அம்மாவின் வழி கொண்டு,
சமைத்து பரிமாறிய பின்,
உன் கண்நோக்குகின்றேன்
பரீட்சை முடிவுக்காய்
பரிதவிக்கும் பள்ளி சிறுமியாய்...................


மௌனத்தை இழைய விட்டு,
என் ஏக்கத்தை ஏற விட்டு,
அழகாய் உண்டு முடித்து,
கை அலம்புகையில்,
பின் தொடர்ந்த
எனை பார்த்து,
கண் சிமிட்டி
புன்னகைக்கையில்,
பிழைத்து கொள்கிறது
என் காதல்!

2 comments:

  1. நல்லயிருக்கு கவிதை பறிமாறல்.

    ReplyDelete
  2. "கண் சிமிட்டி
    புன்னகைக்கையில்,
    பிழைத்து கொள்கிறது
    என் காதல்! "

    கவிதை அருமை தோழி

    ReplyDelete