
நாட்காட்டியும்,
நாளேடுகளும்
மறவாமல் சொன்னன.
அக்டோபர் 2
அரசாங்க விடுமுறை என்று!
காகங்களின்
எச்சங்கள்
சுத்தப்படுத்தப்படும்
கூடவே
காந்தி சிலைகளும்!
கட்சி கொடிகளின்
நிழலில்
இளைப்பாறும்
காந்தி படங்கள்!
அருவா சாமிக்கும்
அவசர விடுதலை!
கருணை மனுவின்
கைங்கர்யத்தில்!
கடற்கரையும்
காந்தி பூங்காக்களும்
"களை" கட்டும்!
எச்சமான விடுமுறையின்
மிச்சத்தை கரைக்க!
சிறப்பு திரைப்படங்கள்
வண்ணமிடும்
தொலைக்காட்சிகள்
மறந்தும் காட்டுவதில்லை
மகாத்மாவை!
தினம்
நாடி செல்லும்
கடை மூடி கிடந்ததால்,
மனம் வாடிப்போன
"குடி" மகனுக்கு
கூடுதலான விலையில்
வேண்டிய மட்டும்!
வாஞ்சையோடு
வாங்கி கொண்டே
வயிறெரிய நீட்டும்
ரூபாய் நோட்டில்
புன்னகைக்கிறார் காந்தி!
காந்தியியத்தை கண்டு ஓடுறோம்.. வெறுமென காந்திஜெயந்தி மட்டும் கொண்டாடுறோம்...
ReplyDeleteகைத்துப்பாக்கியின் கீழே,
புன்னகைக்கிறார் மகாத்மா..
காவல்நிலையம்..!
மிகஅழகாக படைத்திருக்கிறீர்கள் அர்த்தமில்லா காந்திஜெயந்தியை...